செல்வி என்ற நர்ஸக்கா (சிறுகதை).(தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.)
செல்வி என்ற நர்ஸக்கா ( சிறுகதை ) (தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.) நி . அமிருதீன் , உதவிப் பேராசிரியர் , தமிழ் ஆய்வுத்துறை , ஜமால் முகமது கல்லூரி , திருச்சி 93 62 9 400 95 எம்மா இன்னிக்கி லீவு போட்டு வீட்ல இருமா முடியாதும்மா … நிறைய கொரோனா பேசன்ட் இருக்காங்க இன்னிக்கு ஒரு நாள் இந்த அம்மாவுக்காக லீவு போட்டுமா முடியாதும்மா இந்த அம்மாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா , தப்பு தப்பா பேசாத மா உனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்ல . கொஞ்சம் பிபி தான் அதிகமா இருக்கு . அப்படி உனக்கு ஏதாவது ஒன்னு ஆனாலும் இங்க ஒரு உசுரு , அங்க 18 உசுரு . எனக்கு அவங்கதான் ரொம்ப முக்கியம் . வேளாவேளைக்கு கரெக்டா மாத்திரை போட்டுக்கோ . அடுப்பில் பால் சூடு பண்ணி வச்சிருக்கேன் எடுத்து குடிச்சுக்கோ . இட்லி போட்டு வச்சிருக்கேன் பால் தொட்டு சாப்பிட்டுக்கோ . நான் காலையில எட்டு மணிக்கு வந்துருவேன் . பத்திரமா இரு , போயிட்டு வரேன்மா ... என்றவாறு அம...