Posts

Showing posts from August, 2023

பின்னூட்டம்...

*மௌலானா அமீருத்தீன் ஹசனியுடன் ஒரு நாள் ...* நண்பர் அமீருத்தீன் ஹசனி, ஜமால் முஹம்மது கல்லூரியில் தமிழ் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். கீழக்கரை , முஹம்மத் சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நன்னெறி மற்றும் தீனிய்யாத் கல்வி வகுப்புகளுக்கான தொடக்க விழா- 5.8.2023 , சனிக்கிழமை அன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் *Discipline is* *Promotion* என்னும் தலைப்பில் பேருரை ஆற்ற, மௌலானா அவர்கள் நம் கல்லூரிக்கு வருகை தந்திருந்தார் . அனைத்துச் சமூகங்களைச் சார்ந்த (Muslims and others ) சுமார் 700 மாணவர்களுக்கு மத்தியில் ஒரு மணி நேரத்திற்கு மேல், அவர் உரையாற்ற வேண்டும். மூச்சிரைக்க, எதுகை மோனைகளோடு, அடுக்கு மொழித் தொடர்களோடு, தான் படித்த தமிழ் இலக்கியங்களிலிருந்தும், குர்ஆன் ஹதீஸிலிருந்தும் மேற்கோள் காட்டி எல்லோரும் பின்பற்றும் வழக்கமான பாணியில் சண்ட மாருதமாய் முழங்குவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இன்றைய தேதியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒருவித அயற்சியை ஏற்படு...