கல்விப் பணியில் கலைஞர் - கருத்தரங்கு 03-06-2024

இந்திய கல்விசார் ஆய்வாளர்கள் அமைப்பின் தமிழாய்வுச் சங்கமம் மூலம் கலைஞர் 100 எனும் தலைப்பில் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம் ஜூன் மாதம் 03 ம் தேதி மாலை 5. 30 மணிக்கு நடைபெற்றது. கருத்தரங்கில் கல்விப் பணியில் கலைஞர் எனும் தலைப்பில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் நவரசம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஐ. செல்வம் அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்விப் பணியில் கலைஞர் ஆற்றிய பல்வேறு சேவைகளையும் இலக்கியத்துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் பல்வேறு விதமான பங்கெடுப்புகளையும் பங்களிப்புகளையும் சிறப்பாக மொழிந்தார்.இக்கருத்தரங்கில் நான் கலந்து கொண்டதால் கலைஞர் குறித்த பல்வேறு புதிய செய்திகளை அறிந்து கொண்டேன் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி.

Comments