சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா- கவியரங்கம் 12 - புன்னகை
06/06/24 மாலை.6.00 மணியளவில் சங்கத்தமிழ் இலக்கிய பூங்காவில் கவியரங்கம் 12 புன்னகை என்னும் தலைப்பில் குவியம் வழியாக சிறப்பாக நடைபெற்றது.
கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்
-----------------------
01.எழிலரசி தலைமை ஆசிரியர் மன்னச்சநல்லூர்.
02.பத்மினி ஈரோடு.
03.மீனாட்சி மதுரை.
04.மாலதி.
05.உதவிப் பேராசிரியர் நி.அமிருதீன் திருச்சி -20.
06.நிர்மலா தேவி.
07.தி மீரா ஈரோடு.
08.கனகலட்சுமி சீனிவாசன் கரூர்.
09.ஆனந்தி தூத்துக்குடி.
10.ராதிகா ராமலிங்கம்.
11.அனுசியா.
12.விஷாலி.
13.து. பவானி திருவள்ளூர்.
14.தமிழ் மாமனி நீலகண்ட தமிழன் சென்னை.
இதில் நான் வாசித்த கவிதை.....
புன்னகை
நாளை
புன்னகை குறித்த கவியரங்கமாம்!!!!
என்ன கவி பாடுவது ?
சிந்தித்தவாறே கண்ணயர்ந்தேன்.
கனவில் புன்னகையே
பெண் உருவாய் வந்தாள்.
உனக்குப் புன்னகை தானே வேண்டும்..
என்விரல் பிடித்து வா என்றுரைத்து
காற்றில் மிதந்து சென்றாள்.
தாயின் குரல் கேட்டு
பிரசவ அறையில் நுழைந்தாள்.
பிறந்து சில மணி நேரமே ஆன
குழந்தையின் முகத்தில் புன்னகை
அதன் பிஞ்சு விரல் பிடித்திருந்த
தாயின் முகத்திலும் புன்னகை
கதவோரம் நின்று இருவரையும் ரசிக்கும்
கணவனின் முகத்திலும் புன்னகை ..
சற்றே நாங்கள் வெளியே வர
விறகு வெட்டி உழைக்கும் தம்பதியர்
பணி முடித்து கூலி பெறுகையில்
முகம் நிறைந்த புன்னகை .
இதனையும் கடந்து வர
பாராட்டு விழா மேடை குறுக்கிட...
முதல் பரிசு பெறும்
மாணவனின் முகத்திலும் புன்னகை
பரிசு வழங்கும்
தலைவரின் முகத்திலும் புன்னகை.
இதனைக் கண்ட
எங்கள் இருவர் முகத்திலும் புன்னகை.
புன்னகை குறித்து கேட்டாயே ?
இது போதுமா !
என்றுரைத்த பெண்ணுருவம்
ஒரு கேள்வி கேட்டது.
இப் புன்னகைக்கு ஈடானது எப்பொன்னகை ???
பதில் தெரியாமல் நான் புன்னகைக்க ...
அவ்வுருவம் மெதுவாய் கலைந்து போனது
என் தூக்கமும் கலைந்தது
என் பொழுதும் விடிந்தது
அழகான புன்னகையோடு.. --- நி.அமிருதீன்
Comments
Post a Comment