Popular posts from this blog
05.02.2026 ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற உரை.
பிப்ரவரி 5ஆம் தேதி ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற உரை நிகழ்த்துவதற்காக சென்றிருந்தேன். மயிலாடுதுறை புகைவண்டி நிலையத்தில் இறங்கியவுடன் என்னை அன்போடு வரவேற்று உபசரித்து பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றார்கள். பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம் அது. அவர்களின் விளையாட்டு திடலுக்கு என்னை அழைத்து மாணவர்களுக்கு பரிசு வழங்குமாறு கூறி என்னை கௌரவித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். மாலை 3 மணி அளவில் இலக்கிய மன்ற உரை மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மேடை தயாராக இருந்தது. சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரும் பெற்றோர்களும் பள்ளியின் முன்னாள் மாணவர்களும்மௌலானா அப்துல் கலாம் ஆசாத் கிராமக் கமிட்டி உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருமளவு கூடியிருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் மாணவ மாணவியருக்கு தேவையான நற்சிந்தனைகளை தனிநபர் நடிப்பு மௌன நடிப்பு மேஜிக் பாடல் செய்திகள் பொது அறிவு விளையாட்டு போன்றவற்றின் மூலம் முகபாவனைகளோடு விளக்கிக் கூறினேன். பார்த்த அனைவரும் குறிப்பாக ஆறாம் வகுப்பு மாணவர் முதல் முதியவர் வரை பலரும் எனக்கு கை கொடுத்து பாராட்டி வாழ்த்...




Comments
Post a Comment