தமிழ்க் கற்பித்தலில் இணையப் பயன்பாடு 06-06-2024



 

ஐந்து நாள் ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிலரங்கம்

 

 

ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத் துறையில் ஐந்து நாள் ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிலரங்கமானது தமிழ்க் கற்றல் கற்பித்தலில் மரபும் புதுமையும் என்ற தலைப்பில் துவங்கியது. தமிழாய்வுத்துறையின் இணைப்பேராசிரியர் திருமிகு. .இம்தாதுல்லாஹ், அவர்கள் பயிலரங்க அமைப்புச் செயலர் & ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்கள்.

 

                முதல் நாளில் கல்லூரிக் கூட்டமும் துறைக் கூட்டமும் நடைபெற, இரண்டாம் நாள் 06-06-2024 அன்று தமிழ்க் கற்பித்தலில் இணையப் பயன்பாடு என்ற தலைப்பில் திரு. துரை மணிகண்டன், இணையத் தமிழ் ஆய்வாளர். தமிழ்த்துறை. அரசு கலை & அறிவியல் கல்லூரி. நவலூர் குட்டப்பட்டு, திருச்சி.அவர்கள் உரையாற்றினார்அவர் தமது உரையில் தமிழ் இணைய முன்னோடிகள், இணையத்தில் எழுத்துரு உருவாக்கியவர்கள் ஆகியோரை நினைவு கூர்ந்தார். முதன்முதலாக 1957-ல் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்பட்ட இணைய சேவையானது தற்போது வந்தடைந்த நிலை வரை விளக்கிக் கூறினார். மேலும் 21 தமிழ் இணைய மாநாடுகளையும் புகைப்படங்களோடு விளக்கிக் காட்டினார். பேராசிரியர்களுக்குத் தேவையான இலக்கணங்களை வகுத்துக் கூறும் மென்பொருளையும், சந்திப்பிழைகளை கண்டறியும் நாவி, திறள், வாணி, சுளகு போன்ற மென்பொருள்களையும் விளக்கிக் கூறினார். விக்கிபீடியாவில் தமிழ்ப்பேராசிரியர்கள் அதிகமாக எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார்.






Comments

Popular posts from this blog

05.02.2026 ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற உரை.