12.06.2025 அன்று விமானவிபத்தில் பலியான அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...

 

12.06.2025 அன்று குஜராத்தில் நடந்த கொடூரமான விமான விபத்து குறித்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை கொண்டேன். விபத்தில் பலியான அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

எவ்வளவு  கனவுகளோடும் கற்பனைகளோடும் பறப்பதற்கு தயாராக இருந்திருப்பார்கள் அவர்கள்... நாம் அடுத்த நொடி இறக்கப் போகிறோம் என்பதை அறிந்து அவர்கள் மனம் எப்படி எல்லாம் பதட்டமடைந்திருக்கும்... அச்சூழலை ஒரு கவிதையாக வடித்துள்ளேன்.


விமான விபத்து

இவர்கள்

இறப்பதற்காகவே

பறந்திருப்பார்களோ…?

 

மரணத்தை அறிந்து

மரணிப்பவர் மிகச்சிலரே

அவர்களில்

இவர்களும் உள்ளனரோ…?

 

#விமானம்

செயலிழந்துவிட்டதென

விமானி

கூறியிருப்பாரோ…?

 

#பயணிகள் தம்

கடைசி-ஆசையை

வார்த்தையை

சொல்லியிருப்பார்களோ…?

 

கடைசி நிமிடங்கள்…

உள்ளம் பதைபதைத்து…

இதயம்

நின்று போயிருக்குமோ…?

 

இறந்த பின்

விழுந்திருப்பார்களோ…?

இல்லை

விழுந்தபின்

இறந்திருப்பார்களோ…?


இறந்த பின்

எரிந்திருப்பார்களோ…?

இல்லை

எரிந்தபின்

இறந்திருப்பார்களோ…?

 

என்ன நடந்திருக்கும்…?

மரணத்தை

கண்டவர் விண்டிலர்

விண்டவர் கண்டிலர்

ஆயிற்றே…!

 

ஒருவேளை

கருப்புப்பெட்டி-சில

கதைகளை

கூறலாம்-ஆனாலும்

இழந்த உயிர்களை

திருப்பித் தருமா…?

 

நான் (நி.அமிருதீன்) எழுதிய... இலைகளின் மௌனம் கவிதைகளாய்... என்ற கவிதை நூலிலிருந்து...

Comments

Popular posts from this blog

05.02.2026 ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற உரை.