தமிழ்க் கற்பித்தலில் இணையப் பயன்பாடு 06-06-2024
ஐந்து நாள் ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிலரங்கம் ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத் துறையில் ஐந்து நாள் ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிலரங்கமானது தமிழ்க் கற்றல் கற்பித்தலில் மரபும் புதுமையும் என்ற தலைப்பில் துவங்கியது . தமிழாய்வுத்துறையின் இணைப்பேராசிரியர் திருமிகு . க . இம்தாதுல்லாஹ் , அவர்கள் பயிலரங்க அமைப்புச் செயலர் & ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்கள். முதல் நாளில் கல்லூரிக் கூட்டமும் துறைக் கூட்டமும் நடைபெற, இரண்டாம் நாள் 06-06-2024 அன்று தமிழ்க் கற்பித்தலில் இணையப் பயன்பாடு என்ற தலைப்பில் திரு . துரை மணிகண்டன் , இணையத் தமிழ் ஆய்வாளர் . தமிழ்த்துறை . அரசு கலை & அறிவியல் கல்லூரி . நவலூர் குட்டப்பட்டு , திருச்சி . அவர்கள் உரையாற்றினார் . அவர் தமது உரையில் தமிழ் இணைய முன்னோடிகள், இணையத்தில் எழுத்துரு உருவாக்கியவர்கள் ஆகியோரை நினைவு கூர்ந்தார். முதன்முதலாக 1957- ல் செயற்கைக்கோளில் ...