12/01/2025 அன்று கோவை கணுவாய் பள்ளிவாசலில் 15 ஜமாத் (மஹல்லா) இளைஞர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்டு கல்வியின் அவசியமும் பொருளாதார மேம்பாடும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். இந்நிகழ்வு https://youtube.com/@imeidaentertainment247?feature=shared என்ற YouTube சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வினால் சுமார் 75 நபர்கள் பயன் பெற்றனர்.
திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி கணினித் துறையின் சார்பில் 9/1/2025 அன்று இன்றைய மாணவர்கள் ஆர்வம் காட்டுவது புத்தகங்களிலா அல்லது மின்னணு ஊடகத்திலா ? என்ற தலைப்பில் கணினி துறையின் கருத்தரங்கு அறையில் பட்டிமன்றம் நடைபெற்றது. தலா மூன்று மாணவர்கள் இரு அணியிலும் சிறப்பாகப் பேசினார்கள். நான் நடுவராக செயல்பட்டேன்..
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மண்டல தமிழியக்கம் சார்பில்7/1/2025 அன்று திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் நடுவராக பணியாற்றிய தருணம்...